தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 ம், சவரனுக்கு ரூ.40 ம் குறைந்துள்ளது. இன்றைய சனிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.3037 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,890 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.24296 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ 20 காசுகள் குறைந்து ரூ.41.50 ஆக உள்ளது.