தமிழகத்தில் 1.1.2016 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்திட கடந்த 15ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் போன்ற திருத்தம் மேற்கொள்வதற்கும் மனு கொடுக்க செப். 15 முதல் அக்டோபர் 14 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர நாளை 20-ந் தேதியும் (ஞாயிற்றுகிழமை), அடுத்த மாதம் 4-ந் தேதியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும் 1.1.2016 அன்று 18 வயது நிரம்பிய புதிய வாக்களர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, படிவங்களை பெற்று பூர்த்தி செய்து முகாம்களில் கொடுக்க வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் 2016ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மக்களை தொடர்பு கொண்டு பட்டியலை சரிபார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary:Tomorrow a Special Camp for Insert a name in the Voters List.