esiசமீபத்தில் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் கட்டப்பட்ட புதிய மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று அங்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை கே.கே.நகரில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெறவுள்ளது.

தற்போது தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 2655 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளது. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 398 போக மீதமுள்ள 2257 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் 8 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கிவிட்டது. 5 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் இந்த ஆண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லாததால் எம்.சி.ஐ. அதற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிக்கும் மாணவர் சேர்க்கைக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிக்கு நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு எம்.சி.ஐ. அனுமதி அளித்துள்ளது. 100 எம்.பி.பி.எஸ் இடங்களில் தமிழக அரசின் ஒதுக்கீட்டுக்கு 65 இடங்களை வழங்குகிறது. மீதமுள்ள 35 எம்.பி.பி.எஸ். இடங்கள் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

இது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் உயரதிகாரிகள் கூறும்போது, “சென்னை கே.கே.நகர், இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் கட்டமைப்பு வசதி குறைபாடு காரணமாக இதுவரை அனுமதி கிடைக்காத நிலை இருந்தது. ஆனால் தற்போது கட்டமைபில் இருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் தற்போது மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனால் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கும் என்று கூறினர்

கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் உள்ள 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத காலி இடங்கள், மாநில ஒதுக்கீட்டில் சேராமல் காலியாக உள்ள இடங்கள் ஆகியவற்றிற்கு 3வது கட்ட கலந்தாய்வு இம்மாத இறுதியில் நடைபெறும். மொத்தம் எத்தனை இடங்கள் என்ற முடிவு விவரம் இன்னும் கிடைக்கவில்லை என்று மாணவர் சேர்க்கை செயலாளர் உஷா தெரிவித்தார்.

English Summary:Chennai K.K.Nagar ESI Medical College Students Admission Permission.