சென்னையை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள பொன்னியம்மன்மேடு திருப்பதி தங்கவேல் நகர் 2-ஆவது தெருவில் நாளை அதாவது ஜனவரி 26-ஆம் தேதி காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் இந்த மருத்துவ முகாமை திருப்பதி தங்கவேல் வீட்டு உரிமையாளர்கள் பொதுநல சங்கம், சென்னை கல்லீரல் அறக்கட்டளை, “ராஜ் லேப் சர்வீஸஸ்’ ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.
இந்த மருத்துவ முகாமில் மஞ்சள்காமாலை வைரஸ் கிருமிகளான ஹெபடைடிஸ் பி, சி கண்டறிதல், ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை ஆகியன இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை கல்லீரல் அறக்கட்டளையின் தலைவரும் இரைப்பை-குடல் அறுவைச் சிகிச்சை நிபுணருமான ஆர்.பி.சண்முகம் மருத்துவ ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
சென்னை மாநகராட்சி 3-ஆவது மண்டலக் குழுத் தலைவர் டி.வேலாயுதம், மாதவரம் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.நீலகண்ணன், செயலர் எம்.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றன. கொளத்தூர் பகுதியில் உள்ளவர்கள் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்தி மருத்துவ உதவிகள் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
English Summary: Tomorrow jaundice diagnose medical camp in Chennai.