TNPSC2016-ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு பட்டியல் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் அருள்மொழி தெரிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2-ஏ தொகுதியில் வரக் கூடிய 1,947 காலியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு நேற்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 8.60 லட்சம் பேர் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தேர்வு நடைபெற்ற மையங்களை மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படையினர் கண்காணித்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அருள்மொழி நேற்று பார்வையிட்டார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அருள்மொழி, “2016-ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு பட்டியல் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்’ என்று கூறினார்.

English Summary : TNPSC Exam list for the year 2016 as soon as Released.