சென்னை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., ஷீரடிக்கு, சுற்றுலா சிறப்பு ரயிலை இயக்குகிறது.

மதுரையில் இருந்து, செப்., 5ல் இயக்கப்படும் இந்த ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும். ஏழு நாள் சுற்றுலாவில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி, பண்டரிபுரம், ஆந்திராவில் உள்ள மந்த்ராலயம் சென்று வரலாம்.

ஒருவருக்கு, 6,615 ரூபாய் கட்டணம். இக்கட்டணத்தில், ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி, தென்னிந்திய உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன செலவு அடங்கும்.

மேலும் விபரங்களுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை, 90031 40681 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *