இந்தியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையே நல்லுறவை பேணிக்காக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் இருநாடுகள் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக தற்போது துருக்கி நாட்டின் கடற்படை போர்க்கப்பல் ‘கெடிஸ்’ இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது.
இந்த கப்பலின் பயணம் இரு நாட்டு கடற்படை படையினருக்கு இடையே ஒற்றுமை உணர்வை அதிகப்படுத்தும் என்றும், இந்தியா-துருக்கி இடையே உள்ள நட்பு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியா-துருக்கி நாட்டின் விருந்தோம்பல், தலைமை பண்பு, சுற்றுப்பயண அறிக்கை, தொழில், விளையாட்டு ஆகிய பல்வேறு வகையான தகவல்கள் பரிமாறப்பட உள்ளது.
‘கெடிஸ்’ என்ற இந்த கப்பலில் இந்திய நாட்டின் துருக்கி தூதரக அதிகாரி எர்டால் சப்ரி எர்ஜென்ட், கப்பல் தளபதி யூசுப் கொகமன், தமிழ்நாடு-புதுச்சேரி கடற்படை அதிகாரி (பொறுப்பு) அலோக் பட்நாகர் ஆகியோர் முகாமிட்டுள்ளனர். இந்த கப்பல் இன்று சென்னையில் இருந்து புறப்படுகிறது
English Summary : To maintain a good relationship between Turkey and India Turkey frigate visits Chennai port.