கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இடார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தில் இருந்து புறப்பட இருந்த பல்வேறு ரயில்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியதாவது:

1. வண்டி எண்:16317 – கன்னியாகுமரியில் இருந்து ஜம்முதாவி நோக்கி செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்.
2. வண்டி எண் 16787 – திருநெல்வேலியில் இருந்து ஜம்முதாவி நோக்கி செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்
3. வண்டி எண் 16032 – ஜம்முதாவியில் இருந்து சென்னை நோக்கி செல்லக்கூடிய வாரம் மூன்று முறை இயக்கப்படும் அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயில்
4. வண்டி எண் 12295/12296 – பெங்களூர்-பாட்னா இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில்கள்.
5. வண்டி எண் 12645 – எர்ணாகுளம் எச்.நிஜாமுதீன் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்
6. வண்டி எண் 12669 – சென்னை சென்டிரல்-சப்ரா கங்கா காவேரி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில்
7. வண்டி எண் 22646 – திருவனந்தபுரம்-இந்தூர் அகில்யானகிரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்
8. வண்டி எண் 12647 – ஜூலை 5-ந்தேதி கோவையில் இருந்து புறப்படும் கொங்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்
9. வண்டி எண் 22354 – பெங்களூரில் இருந்து புறப்படும் பெங்களூர் கண்டோன்மென்ட்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில்
10. வண்டி எண் 12670 – சப்ராவில் இருந்து புறப்படும் கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில்
11. வண்டி எண் 16864 – மன்னார்க்குடியில் இருந்து புறப்படும் மன்னார்குடி-பகத் கி கோதி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்
12. வண்டி எண் 12295/12296 பெங்களூர்-பாட்னா இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
13. வண்டி எண் 22352 – 6ஆம் தேதி கிளம்பும் யஷ்வந்த்பூர்- பாடலிபுத்திரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்.

English Summary : List of train canceled because of Itarcsi train accident on June 17th.