ஓரு கல் ஒரு கண்ணாடி, நண்பேண்டா ஆகிய வெற்றி படங்களை கொடுத்த உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கெத்து’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக ‘கெத்து’ படத்தின் படக்குழுவினர் தற்போது கொடைக்கானலில் முகாமிட்டுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வரும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ், உதயநிதி ஸ்டாலினின் தந்தையாக நடிக்கின்றார். மேலும் சந்தானம், கருணாகரன், விக்ராந்த் ஆகியோர்களும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் கொடைக்கானலில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். கொடைக்கானலில் படப்பிடிப்பை முடித்தவுடன் இதே படக்குழு இமயமலை செல்லவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘மான் கராத்தே’ இயக்குனர் திருக்குமரன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இந்த படத்தை ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

English Summary : “Gethu” shooting is now taking in kodaikanal with its crew Udhayanidhi Stalin, Sathiyaraj, Santhanam, Karunakaran, Vikranth, Amy Jackson.