தமிழக மருத்துவத்துறை ஃபார்மாசிஸ்ட் என்ற பணிக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 353 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மருந்தாளுனர் (ஃபார்மாசிஸ்ட்)

காலிப்பணியிடங்கள்: மொத்தம் = 353 காலிப்பணியிடங்கள்

சம்பளம்: மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 01.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.03.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 21.03.2019
ஆஃப்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 25.03.2019

தேர்வுக்கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் – ரூ.600
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PwBD – ரூ.300

வயது வரம்பு: ஓசி பிரிவினர் – 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். எஸ்.சி / எஸ்.டி / பிசி / எம்பிசி பிரிவினர் / PwBD – 18 முதல் 57 வயது வரை இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: தேர்வர்கள் டிப்ளமோ இன் ஃபார்மாசி என்ற பட்டயப் படிப்பை 01.03.2019 க்குள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு ஃபார்மாசி கவுன்சிலில் பதிவு செய்ததுடன் அதனை ஒவ்வொரு வருடமும் புதுப்பித்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

முதலில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின், http://www.mrb.tn.gov.in/ – என்ற இணையதளத்திற்கு சென்று ‘ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேசனை’ கிளிக் செய்து, பின் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, http://www.mrb.tn.gov.in/pdf/2019/Pharmacist_Notification_01032019.pdf – என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *