கோடையில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறை நாட்களில் அவசரமான வழக்குகளை விசாரணை செய்வதற்காக நீதிபதிகளை நியமனம் செய்து சென்னை ஐகோர்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மே 1ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
மே 1 – 10ஆம் தேதி: நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், எஸ்.மணிக்குமார் ஆகியோர் தலைமையில் அமர்வு வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெறும் என்றும் அதன் பின்னர் இருவரும் தனியாக வழக்குகளை விசாரணை செய்வர். நீதிபதி எஸ்.விமலா குற்றவியல் வழக்கு விசாரணைகளை மேற்கொள்வார்.
மே 11 – 17-ஆம் தேதி: நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கே.ரவிச்சந்திரபாபு, ஆகியோர் அமர்வு வழக்குகளையும், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் குற்றவியல் தொடர்பான வழக்குகளையும் விசாரணை செய்வர்.
மே 18 – மே 24-ஆம் தேதி: நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.மகாதேவேன் ஆகியோர் அமர்வு வழக்குகளையும், நீதிபதி கே.கல்யாணசுந்தரம் குற்றவியல் வழக்குகளையும் விசாரணை செய்வார்கள்.
மே 25 – மே 31-ஆம் தேதி: வரை நீதிபதிகள் வி.தனபலான், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அமர்வு வழக்குகளையும், நீதிபதி பி.தேவதாஸ் குற்றவியல் தொடர்பான வழக்குகளையும் விசாரணை செய்வார்கள்.
மேலும், திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை மனு தாக்கலும், புதன்கிழமை, வியாழக்கிழமை வழக்கு விசாரணைகளும் நடைபெறும் என்றும் உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் பொன்.கலையரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary: Vacation Time Judges are appointed for Madras Highcourt, Chennai.