தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வடசென்னை’ படத்தில் சந்திராவாக ஆண்ட்ரியாவும், குணாவாக சமுத்திரக்கனியும் நடித்திருக்கிறார்கள்.

தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வடசென்னை’. இப்படத்தை, மூன்று பாகங்களாக இயக்கத் திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், தற்போது முதல் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் ஒவ்வொரு நடிகரும் என்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் என்பதை வெளியிட்டு வருகிறது படக்குழு. இதில் சந்திராவாக ஆண்ட்ரியாவும், குணாவாக சமுத்திரக்கனியும் நடித்திருக்கிறார்கள். இருவரின் லுக்கும் தனிப் போஸ்டர்களாகவும் வடிவமைத்து வெளியிட்டு இருக்கிறது படக்குழு.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

அன்பு என்ற கேரக்டரில் கேரம் விளையாட்டு வீரராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். அந்தக் கதாபாத்திரத்தின் 25 வருட வாழ்க்கைதான் இந்தப்படம். வடசென்னை தான் படத்தின் கதைக்களம். அந்த மக்களின் நிலம் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் மறுக்கப்பட்டு நெருக்கடியில் தள்ளப்படும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் திரைக்கதையாக விரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *