தேமுதிக தலைவர் விஜயகாந்தும் ஸ்டாலினுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“அண்ணா மற்றும் கருணாநிதி பாதையில் ஸ்டாலினும் பயணித்து திமுகவை சீரும் சிறப்புமாக அந்த தலைவர்கள் வழியில் வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன். திமுக பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தேமுதிக சார்பாக மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் இயக்கத்திற்கு பெருமையையும் புகழையும் சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *