அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் பாடல் வரிகளை பாடலாசிரியர் அருண்பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல” என்ற வரிகள் உள்ளது . இதுவே படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இயக்குநர் சிவா- அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *