உணவில் அதிக சுவையையும் மணத்தையும் தர கூடிய உணவு வகைகளில் புதினாவும் ஒன்று. பிரியாணியின் ருசியை அதிகரிக்க புதினாவை பயன்படுத்துவோம். சமையலுக்கு பயன்படுத்த கூடிய இந்த உணவு பொருள் நம் உடல் ஆரோக்கியத்தையும் காக்க உதவுகிறதாம்.

புதினாவை தினமும் டீ போல தயாரித்து குடித்து வந்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். புதினா டீயை காலையில் குடித்து வருவதன் மூலம் நீங்கள் அடைய கூடிய பயன்கள் யாவையும் இங்கு அறிவோம்.

மன அழுத்தம்: நாள் முழுக்க ஓடி ஆடி வேலை செய்ய அதிக ஆற்றல் தேவை. அத்துடன் செய்யும் வேலையில் மன அழுத்தமும் கொள்ள கூடாது. இப்படி உங்களை எந்நேரமும் கூலாக வைத்து கொள்ள தினமும் காலையில் புதினா டீ குடித்து வந்தால் போதும்.

உடல் எடை: தினமும் 1 கப் புதினா டீ குடித்து வந்தால் உடல் எடை சட்டென குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். புதினா டீ உங்களை எப்போதுமே நிறைவான நிலைக்கு கொண்டு செல்லும். ஆதாலால், எப்போ பார்த்தாலும் சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்கிற என்ணம் மாறும்.

நோய் எதிர்ப்பு சக்தி: பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் பலவித தாதுக்கள் புதினா டீயில் நிறைந்துள்ளதால் உடல் ஆற்றலை கூட்டும். அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக உண்டாக்க தினமும் காலையில் 1 கப் புதினா டீ குடித்து வாருங்கள்.

செரிமானத்திற்கு: காலையில் யாரெல்லாம் புதினா டீ குடித்து வருகிறார்களோ, அவர்கள் அனைவருமே செரிமான கோளாறு இல்லாமல் அந்த நாளை நிம்மதியாக வாழ்வார்கள். மேலும், வயிற்றில் இருக்க கூடிய கெட்ட பாக்டீரியாக்களையும் இது அழிக்க கூடும்.

துர்நாற்றத்தை: பொதுவாக நாம் எந்த விதமான அசைவம் சாப்பிட்டாலும் அதனால் வாயில் துர்நாற்றம் ஏற்படும். இது போன்ற துர்நாற்ற பிரச்சினைகளுக்கு புதினா டீ சிறந்த தீர்வாக இருக்கும். அத்துடன் நிம்மதியான தூக்கத்தையும் இது தரும்.

தயாரிப்பு முறை: 2 கப் நீரை எடுத்து கொதிக்க விடவும். பிறகு 1 கைப்பிடி புதினாவை நறுக்கி இந்த நீரில் போடவும். 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். சற்று நேரம் ஆறவிட்டு இதனுடன் தேன் கலந்து காலை நேரத்தில் குடித்து வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *