பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்பிஐ வங்கியில், சீனியர் எக்ஸிகியூடிவ் (கிரெடிட் ரிவ்யூ) என்ற பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சீனியர் எக்ஸிகியூடிவ் (கிரெடிட் ரிவ்யூ)
காலிப்பணியிடங்கள்: மொத்தம் = 15 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.02.2019
ஆன்லைனில் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 11.02.2019
தேர்வுக்கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் = ரூ.600
எஸ்.சி / எஸ்.டி / PWD பிரிவினர் = ரூ.100
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் பணப் பரிவர்த்தன முறையில் மட்டுமே தேர்வுக் கட்டணத்தை செலுத்த முடியும். செலுத்திய தேர்வுக் கட்டணத்தை மீண்டும் திரும்ப பெற இயலாது.
வயது வரம்பு: (01.12.2018 க்குள்) 25 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பளம்: வருட சம்பளமாக ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும்.
கல்வித்தகுதி: சீனியர் எக்ஸிகியூடிவ் (கிரெடிட் ரிவ்யூ) என்ற பணிக்கு, சார்ட்டர்ட் அக்கவுண்ட் (CA) / எம்.பி.ஏ (Finance) / Master in Finance control / Master in Management Studies / PGDM (Finance) என்ற பட்டப்படிப்பை முடித்து, குறைந்தது 2 வருட பணி சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
எஸ்பிஐ வங்கியின் https://bank.sbi/careers (அல்லது) https://www.sbi.co.in/careers/ – என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், இது குறித்த முழுமையான தகவல்களை பெற
https://www.sbi.co.in/webfiles/uploads/files/2101191853-ADV-ENG.pdf – என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.