தென்னிந்திய மாநிலங்களிலுள்ள இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில், 1 வருட அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி பணிகள்:
1. ட்ரேடு அப்ரண்டிஸ் – ஃபிட்டர்
2. ட்ரேடு அப்ரண்டிஸ் – எலக்ட்ரீசியன்
3. ட்ரேடு அப்ரண்டிஸ் – எலக்ட்ரானிக் மெக்கானிக்
4. ட்ரேடு அப்ரண்டிஸ் – இண்ட்ரூமெண்ட் மெக்கானிக்
5. ட்ரேடு அப்ரண்டிஸ் – மெஷினிஸ்ட்
6. டெக்னீசியன் அப்ரண்டிஸ் – மெக்கானிக்கல்
7. டெக்னீசியன் அப்ரண்டிஸ் – இண்ட்ரூமெண்டேசன்
8. டெக்னீசியன் அப்ரண்டிஸ் – சிவில்
9. டெக்னீசியன் அப்ரண்டிஸ் – எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்
10.டெக்னீசியன் அப்ரண்டிஸ் – எலக்ட்ரிக்கல்
11.டெக்னீசியன் அப்ரண்டிஸ் – எலக்ட்ரானிக்ஸ்
12. ட்ரேடு அப்ரண்டிஸ் – அக்கவுண்டெண்ட்

பயிற்சிப் பணியிடங்கள்: மொத்தம் = 420 + 16 *(PwBD) = 436 இடங்கள்

பயிற்சிக் காலம்: சம்பளத்துடன் கூடிய 12 மாதங்கள் அதாவது 1 வருட காலம்

முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.02.2019, மாலை 05.00 மணி வரை
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: மார்ச் – 2019.

வயது வரம்பு:

பொதுப் பிரிவினர்: 18 முதல் 24 வயது வரை
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர்: 18 முதல் 29 வயது வரை
ஓபிசி பிரிவினர்: 18 முதல் 27 வயது வரை

கல்வித்தகுதி:

1. ட்ரேடு அப்ரண்டிஸ் – ஃபிட்டர் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 2- வருட ஐடிஐ (ஃபிட்டர்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

2. ட்ரேடு அப்ரண்டிஸ் – எலக்ட்ரீசியன் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 2- வருட ஐடிஐ (எலக்ட்ரீசியன்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

3. ட்ரேடு அப்ரண்டிஸ் – எலக்ட்ரானிக் மெக்கானிக் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 2- வருட ஐடிஐ (எலக்ட்ரானிக் மெக்கானிக்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

4. ட்ரேடு அப்ரண்டிஸ் – இண்ட்ரூமெண்ட் மெக்கானிக் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 2- வருட ஐடிஐ (இண்ட்ரூமெண்ட் மெக்கானிக்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

5. ட்ரேடு அப்ரண்டிஸ் – மெஷினிஸ்ட் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 2- வருட ஐடிஐ (மெஷினிஸ்ட்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

6. டெக்னீசியன் அப்ரண்டிஸ் – மெக்கானிக்கல் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

7. டெக்னீசியன் அப்ரண்டிஸ் – இண்ட்ரூமெண்டேசன் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் இண்ட்ரூமெண்டேசன் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

8. டெக்னீசியன் அப்ரண்டிஸ் – சிவில் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் இண்ட்ரூமெண்டேசன் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

9. டெக்னீசியன் அப்ரண்டிஸ் – எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

10. டெக்னீசியன் அப்ரண்டிஸ் – எலக்ட்ரிக்கல் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

11. டெக்னீசியன் அப்ரண்டிஸ் – எலக்ட்ரானிக்ஸ் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

12. ட்ரேடு அப்ரண்டிஸ் – அக்கவுண்டண்ட் என்ற பயிற்சிப் பணிக்கு, ஏதாவது ஒரு டிகிரி பட்டப்படிப்பை பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே இந்தப் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் (www.iocl.com) இணையதளத்திற்கு சென்று (Careers -> Latest job openings -> Engagement of Technical and Non – Technical Trade & Technician Apprentices in Southern Region (Marketing Division) – FY 2019-20) விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற
https://www.iocl.com/download/Notification-Southern-Region-for-the-year-2019-2020.pdf – என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *