முத்தமிழ் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் 4.10.2019 அதிகாலை 2 மணியளவில் மாரடைப்பால், சென்னை ராய் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 78.

கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் தமிழிலக்கிய வரலாற்றில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாகக் கவிதை, காப்பியம், நாடகம், சிறுகதை, புதினம், குழந்தை இலக்கியம் ஆய்வு என எண்ணற்ற நூல்களை எழுதி முத்திரைப் பதித்தவர்.

நூறாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பழைமை வாய்ந்த தமிழிலக்கிய இலக்கணங்களை மீண்டும் பதிப்பித்து வெளியிட்டு இன்றைய இளைஞர்கள் படிக்க வாய்ப்பளித்தவர்.

அண்மையில் இவருடைய கவிதையின் ஆங்கில ஆக்கத்தை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் வெளியிட்டார்.

தமிழக பாடநூல்களில் மட்டுமின்றி அயல் நாட்டு பாடநூல்களிலும் இவருடைய கவிதை பாடமாக இடம் பெற்றுள்ளது.

பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைஞர் விருது மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

அண்ணாரின் இறுதி ஊர்வலம் 05.10.2019 காலை 10 மணியளவில் அவரது இல்லத்தில் என்.ஜி.ஓ. காலனி, ஆதம்பாக்கம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *