11 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான கால அட்டவணைகளை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வரும் ஜூன் 19-ம் தேதி உடனடி சிறப்புத் துணைத் தேர்வு நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது. அனைத்து பாடங்களுக்கும் நடத்தப்படும் இந்த துணைத் தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல், இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேயே உயர்கல்வியைத் தொடர முடியும்.

இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு (Govt Examination Service centre) சென்று ஆன்லைன் மூலம் பதிவேற்ற வேண்டும். இந்த சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு மே 11 முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை 12-ஆம் வகுப்பு துணை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, ஜூன் 27 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வு நடைபெறும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 27, 28, 30, 1, 3, 4, 5 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மத்திய 1.15 மணி வரை 11-ம் வகுப்பு துணை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *