தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான மழை காரணமாக, மின் தேவை 2,500 மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது. மேலும், காற்றாலை மூலமும் தினசரி 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைப்பதால், மின்வெட்டு பிரச் சினை ஏற்படாது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் தினசரி மின் தேவை 14,500 முதல் 15 ஆயிரம் மெகாவாட் வரை உள்ளது. அனல், புனல் மின் நிலையங்கள், காற்றாலை மூலம் 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால், இவற்றில் முழு அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படுவதில்லை. தினமும் 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், காற்றாலை மூலம் கிடைத்து வந்த மின்சாரம் திடீரென நின்றது, அனல் மின் நிலையங்களில் பழுது, நிலக் கரி பற்றாக்குறை போன்ற காரணங் களால் மின் உற்பத்தி குறைந்தது. இதனால், கடந்த 9, 10 தேதிகளில் மின் தடை ஏற்பட்டது. இதை யடுத்து, அனல்மின் நிலையங்களில் உற்பத்தி உடனடியாக தொடங்கப் பட்டு மின் தேவை சமாளிக்கப்பட் டது. அத்துடன், மத்திய அரசும் தமிழகத்துக்கு கூடுதல் நிலக்கரி வழங்க சம்மதம் தெரிவித்தது. முதல்கட்டமாக, 1.60 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி தமிழகம் வந்துள்ளது.