புதுடெல்லி: அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அரபிக் கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடமேற்கு பகுதியை நோக்கி நகரவுள்ளது.
இது அடுத்த 2 நாள்களில் புயலாக மாறக்கூடும். இதன் காரணமாக, கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. லட்சதீவு மற்றும் தென்கிழக்கு அரபி கடல் பகுதியில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்றுவீசக்கூடும் என்று திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.