சென்னையில் மெட்ரோ ரயில் பாதையின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் சென்னை மக்களின் பயன்பாட்டுக்கு மிக விரைவில் திறக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் மோனோ ரயில் திட்டமும் மிக விரைவில் நிச்சயம் தொடங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று சட்டசபையில் கூறியுள்ளார்.
நேற்று தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலகிருஷ்ணன், மோனோ ரயில் திட்டம் தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பினார். அவருக்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் செந்தில்பாலாஜி ‘சென்னையில் மோனோ ரயில் திட்டப் பணிகளுக்காக 2 நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும், மோனோ ரயில் திட்டம் விரைவில் நிச்சயமாக தொடங்கும்’ என்றும் உறுதி அளித்தார்.
English Summary: Mono Rail Project should be started quickly in Chennai, says Tamilnadu Minister Senthil Balaji.