ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனி சமையல் அறைகளுடன் கூடிய குடும்பங்கள் இருந்தால் அவர்களுக்கு தனித்தனி ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் பேசியபோது, `தற்போது ஒரே வீட்டில் பல குடும்பத்தினர் வசிக்கும் நிலை ஒருசில இடங்களில் உள்ளது. அவர்கள் ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும்போது, ஒரு வீட்டுக்கு ஒரு ரேஷன் அட்டைதான் வழங்கமுடியும் என அதிகாரிகள் கூறி விடுகின்றனர். அவர்களுக்கும் தனியாக ரேஷன் அட்டை வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அவருக்கு பதிலளித்த அமைச்சர் காமராஜ் “ஒரே வீட்டில் வசித்தாலும், தனித்தனியாகச் சமையல் அறை வைத்திருந்தால், தனிக் குடும்பத்துக்கும் தனியாக ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார். மேலும் தற்போது தமிழகத்தில் 11 லட்சம் புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் 3.58 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளன என்று கூரிய அவர் தற்போது மாநிலத்தில் 1.97 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளதாகவும், புதிய அட்டைகள் பெறத்தகுதி இருந்தால், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் 60 நாட்களுக்குள் ரேஷன் அட்டை தரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

English Summary : Separate kitchen with separate ration card in the same house