சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு கற்பகாம்பாள் கபாலீசுவரர் கோயிலில் அறுபத்து மூவர் திருவிழா வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த விழாவுக்கு பெருவாரியான பக்தர்கள் சென்னையின் பல பகுதிகளில் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களின் வசதிகளை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து நேற்று தென்னக ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில், சென்னை கடற்கரையில் இருந்து சிறப்பு பயணிகள் ரயில் இரவு 10.20 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.05 மணிக்கு வேளச்சேரி சென்றடையும் என்றும் அதேபோல, வேளச்சேரியில் இருந்து சிறப்பு பயணிகள் ரயில் இரவு 11.15 மணிக்குப் புறப்பட்டு 12 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த சிறப்பு ரயில்களை பயன்படுத்தி கொள்ளுமாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary: Special Trains from Chennai Beach and Velachery to Mylapore on April 2nd.