சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில், வாராணசியிலிருந்து ஹைதராபாத் செல்லும் ‘பாரத் கெளரவ் ரயில்’ தமிழகம் வழியே இயக்கப்படுகிறது.

வாராணசியில் இருந்து தமிழகம் வழியாக ஹைதராபாத் (வண்டி எண்: 06906) செல்லும் பாரத் கெளரவ் ரயிலின் திருத்தியமைக்கப்பட்ட அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, வாராணசியிலிருந்து வியாழக்கிழமை (24.11.2022) புறப்பட்டு விஜயவாடா வழியாக சென்னை எழும்பூருக்கு சனிக்கிழமை (26.11.2022) வந்தடைகிறது.

அதேபோல, ஞாயிற்றுக்கிழமை (27.11.2022) விழுப்புரம், திருச்சி, ராமேசுவரம் வழியாக பயணிக்கும் பாரத் கெளரவ் ரயில் திங்கள்கிழமை (28.11.2022) மதுரை, திண்டுக்கல், சேலத்தைச் சென்றடைகிறது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (29.11.2022) ஜோலாா்பேட்டை, காட்பாடி, சென்னை பெரம்பூா் வழியாக ஹைதராபாத் சென்றடையும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *