சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் பகுதிகளில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பறக்கும் ரயில் சேவையை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆய்வு செய்து மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக முதற்கட்ட ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையை பறக்கும் ரயில் சேவையுடன் இணைக்கும் வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்ததும், பறக்கும் ரயில் சேவையை மேம்படுத்தி மெட்ரோ ரயில் சேவைக்கு இணையான சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் டெண்டர் விட்டு பறக்கும் ரயில் சேவையை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.