இளையதளபதி விஜய்யின் படங்கள் அனைத்துமே அபாரமான ஒப்பனிங் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீசாகவுள்ள ‘புலி’ திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய விஜய் படத்தின் ஓப்பனிங் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை வெளிவந்த விஜய் படங்களிலேயே இந்த படம்தான் உலகில் மிக அதிகளவு தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய் படம் என்ற பெருமையை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 3,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
உலகில் உள்ள 10 முக்கிய நாடுகளில் 3,000 திரையரங்குகளில் ரிலீஸாவது என்பது தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் எப்போதாவது நடைபெறும் நிகழ்ச்சி ஆகும். இந்த திரைப்படம் அமெரிக்காவில் 157 திரையரங்குகளிலும், பிரிட்டனில் 58 திரையரங்குகளில், கனடாவில் 18 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கு முன்னர் இந்த நாடுகளில் வெளியான ‘ஐ’ மற்றும் கோச்சடையான் படங்கள் ரிலீஸான தியேட்டர்களின் எண்ணிக்கைகளைவிட ‘புலி’ ரிலீசாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இந்த படம் ரிலீஸாகும் தியேட்டர்களின் எண்ணிக்கைகளும், காட்சிகளின் எண்ணிக்கைகளும் மலைக்க வைக்கும் அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள மாயாஜால் காம்ப்ளக்ஸில் தினமும் 48 காட்சிகளுக்கு நேற்று முதல் புக்கிங் நடந்து வந்த நிலையில் தற்போது 16 ஸ்க்ரீன்களில் 68 காட்சிகள் திரையிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு அக்டோபர் 8ஆம் தேதி வரை சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே ‘புலி’யின் ஓப்பனிங் வசூல் இதுவரை இல்லாத அளவில் மிகப் பிரமாண்டமாகவும், வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
English Summary:Staggering a puli’s Remarkable Opening.