trainதிருவிழா நேரங்களிலும், தொடர்ச்சியாக விடுமுறை வரும் நேரங்களிலும் அதிகளவிலான நெரிசலை தவிர்க்க தென்னக ரயில்வே அவ்வப்போது சிறப்பு ரயில்களை பயணிகளின் வசதிக்காக இயக்கி வருகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறைகள் தொடர்ந்து வருவதால் சென்னையில் பண்புரியும் வெளியூர் ஊழியர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே சென்னையில் இருந்து திருநெல்வேலி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து சனிக்கிழமை தெற்கு ரயில்வே வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது:

1. சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்: ரயில் எண் 06092: அக்டோபர் 20 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

2. திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயில்: ரயில் எண் 00616: அக்டோபர் 25 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

3. சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் அதிவிரைவு சிறப்பு ரயில்: ரயில் எண் 06093: அக்டோபர் 23 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

4. சென்னை சென்ட்ரல் -திருவனந்தபுரம் சுவிதா அதிவிரைவு சிறப்பு ரயில்: ரயில் எண் 00617: அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

5. திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல்: ரயில் எண் 00618: அக்டோபர் 18, 25 தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் காட்பாடி, ஈரோடு, பாலக்காடு, எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுதபூஜை விடுமுறையில் சொந்த ஊர் செல்பவர்கள் இந்த சிறப்பு ரயில்களை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

English Summary:Special Train for Vijayadasami Festivel From Chennai to Tirunelvelli, tiruvananthapurm.