காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தி.மு.க., கூட்டணி கட்சிகள், நாளை பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில், நாளை பஸ்களும் ஓடாது என, தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.சென்னை பல்லவன் இல்லத்தில், நேற்று நடந்த, தொழிற்சங்க கூட்டமைப்பினரின் ஆலோசனைக்குப்பின், இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில், தொ.மு.ச., – சி.ஐ.டி.யு., – ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட, 10 தொழிற்சங்கங்கள் ஈடுபட உள்ளன. இதனால், பெருமளவு பஸ்கள் ஓடாது என, தெரிகிறது. மணல் லாரி உரிமையாளர்களும், நாளைய பந்திற்கு ஆதரவு அளித்து உள்ளனர்.

‘போக்குவரத்துத் துறை, சேவைத்துறை என்பதால், அரசியல் கட்சிகள் நாளை நடத்தும் ஸ்டிரைக்கில், அரசு பஸ் ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது. அனைவரும், பணிக்கு வர வேண்டும். பணிக்கு வராதோர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என, போக்குவரத்து கழக அதிகாரிகள், சுற்றறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளனர்.

English Summary: Transport employees union plan a strike.