ganeshtrishaபிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கிய ‘அபியும் நானும்’ திரைப்படத்தில் பிரகாஷ்ராஜின் மகளாக நடித்த த்ரிஷாவுக்கு ஜோடியாக நடித்த கணேஷ் வெங்கட்ராமன், ஆறு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் த்ரிஷாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

த்ரிஷாவின் மேனேஜர் கிரிதரன் தயாரிக்கும் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தை கோவி என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் சுரேந்திர ரெட்டியிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் த்ரிஷாவுக்கு ஜோடியாக கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கவுள்ளதாகவும், விரைவில் அவர் இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் படக்குழுவினர் தெரிவிதுள்ளனர்.

இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய கணேஷ் வெங்கட்ராமன், ” ‘அபியும் நானும்’ படத்திற்கு பின்னர் மீண்டும் த்ரிஷாவுடன் நடிக்க உள்ளேன். இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து இன்னும் சில நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கின்றேன்’ என்று கூறியுள்ளார்.

த்ரிஷா நடித்த படங்களில் மிகச்சிறந்த படம் என்ற பெருமையை ‘அபியும் நானும்’ பெற்றது என்பது அனைவரும் அறிந்ததுதான். அதேபோன்ற ஒரு பெருமையை இந்த படமும் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English Summary:After Six years Trisha pair with Ganesh venkatraman