vedhalam-24102015‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்த ‘வேதாளம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, இந்த படத்தின் பின்னணி இசை மற்றும் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் இந்த படத்திற்காக கடந்த சில நாட்களாக இரவுபகலாக டப்பிங் பணியில் ஈடுப்பட்டிருந்த அஜீத், நேற்று அதிகாலை 4.00 மணிக்கு தன்னுடைய டப்பிங் பணியை முழுமையாக முடித்துவிட்டதாகவும், இத்துடன் ‘வேதாளம்’ படத்தில் அஜீத்தின் பணிகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் வரும் 25ஆம் தேதி சென்சாருக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் டிரைலர் வரும் வியாழன் அன்றும் அதாவது 29ஆம் தேதி வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியாகி உலக சாதனை செய்த இந்த படத்தின் டீசர் தற்போது யூடியூபில் இந்த டீசர் 5 மில்லியன் பார்வையாளர் என்ற சாதனையை நெருங்கியுள்ளது. இன்னும் சுமார் 30,000 பேர் இந்த டீசரை பார்த்துவிட்டால் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை பெற்ற ஒரே தென்னிந்திய படம் என்ற பெருமையை இந்த டீசர் பெற்றுவிடும்.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், சூரி, தம்பி ராமையா, அஸ்வின், கபீர் சிங், ராகுல்தேவ், வித்யூலேகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். அனிருத் இசையமைப்பில், வெற்றியின் ஒளிப்பதிவில் அமைந்துள்ள இந்த திரைப்படம் வரும் அஜீத் ரசிகர்களுக்காக வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது.
English summary-Actor ajith completed his shooting vedhalam movie