tnhca100-cycle-1111111111111-400x400-imadymzdfh8uv6jbஅகர்பத்தி உற்பத்தியில் இந்திய அளவில் முன்னணியில் விளங்கும் சைக்கிள் அகர்பத்தியின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மைசூரை தலைநகரமாக கொண்ட சைக்கிள் பிராண்ட் அகர்பத்தி நிறுவனம், இந்தியாவில் தயாராகும் அகர்பத்திகளில் 20% உற்பத்தி செய்கிறது. தென்னிந்தியாவில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் இந்த அகர்பத்திகள் வட இந்தியாவிலும் காலூன்ற புதிய முயற்சியாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை பெரும்தொகை கொடுத்து அம்பாசிடராக ஒப்பந்தம் செய்துள்ளது

பிரபல பாலிவுட் இயக்குனர் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் அமிதாப்பச்சன் நடிக்கும் சைக்கிள் பிராண்ட் அகர்பத்தி விளம்பப்படம் ஒன்று தயாராகி வருவதாகவும், விரைவில் இந்த விளம்பரப்படம் குஜராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் என்றும், சைக்கிள் அகர்பத்தி நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அர்ஜூன் ரெங்கா தெரிவித்துள்ளார்.

அமிதாப்பச்சனின் பாப்புலாரிட்டி தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பை வட இந்தியா முழுவதும் கொண்டு செல்ல உதவும் என்றும், இந்த விளம்பரத்தால் தங்கள் விற்பனை அதிகரிக்கும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

English Summary:Amitabh Bachchan was appointed ambassador of the brand bicycle akarpatti