aniruth
ஜெய், சுரபி, கருணாஸ், ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் மணிமாறன் இயக்கி வரும் திரைப்படம் ‘புகழ். இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் என்ற இரட்டையர்கள் இசையமைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் இசையமைக்கும் படங்களில் இருந்து மட்டுமின்றி மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் ஈகோ இன்றி பாடி வரும் அனிருத், புகழ் படத்தில் ஒரு பாடலை பாட வேண்டும் என்று விவேக்-மெர்வின், விடுத்த அழைப்பை ஏற்று சமீபத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

‘நாங்க பொடியன்கள்’ என்று தொடங்கும் குத்துப்பாடல் ஒன்றை பாட ஆரம்பித்த அனிருத், அந்த பாடலை வெறும் முப்பதே நிமிடங்களில் பாடி முடித்து சாதனை புரிந்துள்ளார். தொழில்முறை பாடகராக இல்லாத ஒருவர் ஒரு பாடலை முப்பது நிமிடங்களில் பாடியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் இளையதளபதி விஜய், ‘புலி’ படத்திற்காக ஒரு பாடலை ஒரு மணி நேரத்தில் பாடி முடித்தார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இந்த பாடல் மூலம் விஜய்யை முந்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும். மேலும் இந்த பாடல் படத்தில் ஜெய்யின் அறிமுக பாடலாக வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

பிரபல தொழிலதிபர் வருண்மணியன் தயாரிக்கும் இந்த படத்தின் பாடல்கள் வரும் ஜூலை 3-ந் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

 

English Summary : anirudh-vijay-muntivittara.