nayan
மதராச பட்டணம், தெய்வத்திருமகள், தலைவா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல்.விஜய், தற்போது விக்ரம் பிரபு நடித்துள்ள ‘இது என்ன மாயம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ஏ.எல்.விஜய் முதன்முதலாக ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

மலையாளத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ஷட்டர்’ என்ற படத்தை அவர் தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. பிரபல எடிட்டர் அந்தோணி, இந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

இந்த படத்திற்கு ‘நைட் ஷோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நயன்தாரா, ஆரி நடித்த படம் ஒன்றுக்கு ‘நைட் ஷோ’ என்ற பெயர் வைத்துவிட்டு, பின்னர் அந்த படத்திற்கு ‘மாயா’ என்று டைட்டில் மாற்றப்பட்டது அனைவரும் தெரிந்ததே. நயன்தாரா படக்குழுவினர் அனுமதியுடன் இந்த டைட்டிலை பெற்றுள்ள விஜய், தனது படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என கருதியதால், நைட் ஷோ என்ற டைட்டிலை வைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. விரைவில் இசை மற்றும் டிரைலரை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

English Summary : Nayan naitsovai seized from the flick .