5-வது ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது.

6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்று இருந்தன. இந்திய அணி அரைஇறுதியில் ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கிலும், பாகிஸ்தான் 3-1 என்ற கணக்கில் மலேசியாவையும் தோற்கடித்தன.

இறுதிப் போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பலத்த மழையால் இறுதிப்போட்டி ரத்து செய்யப்பட்டது.

இதனால் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை கூட்டாக கைப்பற்றின. இந்திய அணி ‘லீக்‘ ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது.

இதனால் இறுதிப்போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் இறுதிப்போட்டி மழையால் நடைபெறவில்லை.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை இரு அணிகளும் 3 முறை கைப்பற்றி உள்ளன. ஏற்கனவே இந்திய அணி 2011, 2016-ம் ஆண்டுகளிலும், பாகிஸ்தான் 2012, 2013-ம் ஆண்டுகளிலும் வென்று இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *