அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வ செய்தி வெளியானதை அடுத்து இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக இந்த படத்தில் நடிக்ககூடிய நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் கதையில் ரஜினியை அடுத்து மிக முக்கியமாக உள்ள இன்னொரு கேரக்டரில் தினேஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டக்கத்தி படத்தில்தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முதலாக ரஜினியுடன் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்த ரஞ்சித், மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

சந்தோஷ் சுப்பிரமணியம் இசையமைக்கவுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளார்.

English Summary : After Rajini-Ranjith project officially confirmed “Attakkathi” Dinesh joins the crew.