‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள ‘வேதாளம்’ திரைப்படத்தின் பாடல்கள் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளான நாளை அதிகாலை 12 மணிக்கு வெளியாகவுள்ளது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்களின் டிராக் லிஸ்ட் நேற்று மாலை ஐந்து மணிக்கு வெளியானது. இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

வேதாளம் படத்தின் டிராக்-லிஸ்ட் விபரங்கள் வருமாறு:

1. வீர விநாயகா: இந்த பாடலை கவிஞர் விவேகா எழுதியுள்ளார். அனிருத் மற்றும் விஷால் தல்டானி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். இந்த பாடல் அஜீத்தின் அறிமுகப் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. Don’t You Mess With Me: இந்த பாடலை படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோர் பாடியுள்ளனர். கார்கி இந்த பாடலை எழுதியுள்ளார்.

3. உயிர் நதி கலங்குதே: இந்த பாடலை கவிஞர் விவேகா எழுத ரவிசங்கர் பாடியுள்ளார்.

4. The Theri Theme: இந்த பாடலை சிவா எழுத அனிருத் பாடியுள்ளார்.

5. ஆலுமா டோலுமா: இந்த பாடலை ரோகேஷ் எழுத அனிருத் மற்றும் பாட்ஷா பாடியுள்ளனர். இந்த பாட்ஷா பாலிவுட்டில் பல பிரபலமான ராப் பாடல்களை பாடியுள்ளவர் என்பதும் முதன்முதலாக தமிழ்ப்படத்தில் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளியான நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஆடியோ டீசரும் யூடியூப் இணையதளத்தில் வெளியானது. 22 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த ‘ஆலுமா டோலுமா’ டீசர் அஜீத் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் டிராக்-லிஸ்ட், ஆடியோ டீசர் வெளியாகியுள்ளதாக் அஜீத் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

English Summary : Track list Audio Teaser Released for Vedhalam.