கடந்த 90களில் கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கெளதமி, நீண்ட இடைவேளைக்கு பின்னர் சமீபத்தில் வெளிவந்த ‘பாபநாசம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ரீ எண்ட்ரி ஆனார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்த நடிக்க ஆர்வமாக உள்ளதாக கெளதமி ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த ‘த்ரிஷயம்’ தமிழ் ரீமேக் படத்தில் நடித்த கெளதமி, தற்போது மோகன்லாலுக்கு ஜோடியாகவே ஒரு மலையாள படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குனர் சந்திரசேகர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் கேரக்டர் குறித்து இயக்குனர் சந்திரசேகர் சமீபத்தில் நடிகை கெளதமியை சந்தித்து கூறியதாகவும், அவர் கூறிய கேரக்டர் கெளதமியை மிகவும் கவர்ந்ததால் இந்த படத்தில் நடிக்க கெளதமி ஒப்புக்கொண்டதாகவும், விரைவில் இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 1997ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் மோகன்லாலுடன் ஜோடியாக கெளதமி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சரியாக 18 வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லாலுக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளார்.

English Summary : After 18 long years Gautami paired with Mohanlal in a malayalam film.