நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நவம்பர் 19ஆம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன. இரு தரப்பும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டனர். இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிகளையும் மீறி வருகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கும் வங்கி நிர்வாகங்கள் செவி சாய்ப்பதில்லை. நிர்வாகத்திற்கும், பணியாளர்களுக்கும் இடையே இருக்கும் உறவை அலட்சியப்படுத்துகிறார்கள். இவர்களின் செயல் வங்கி ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, அனைத்து வங்கிகளிலும் உள்ள அகில இந்திய வங்கி பணியாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், வருகிற 19-ந் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *