கல்வி, வேலை என அனைத்து இடங்களிலும் அதிகமாக தற்சமயம் லேப்டாப் மாடல்கள் தான் அதிகமாக பயன்படுகிறது, இந்தியாவில் லேப்டாப் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்திய சந்தையில் டெல், ஹெச்பி, அசுஸ், லெனோவோ என பல்வேறு நிறுவனங்கள் தங்களது பட்ஜெட் விலை லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.

குறிப்பாக அசுஸ் நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த ஒரு பட்ஜெட் விலை லேப்டாப் மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சில லேப்டாப் மாடல்களைப் பார்ப்போம்.

ஹெச்பி 15q-by002AX: ஹெச்பி நிறுவனத்தின் 15q-by002AX என்ற லேப்டாப் மாடல் பொதுவாக 15.6-இன்ச் எச்டி எல்இடி பேக்லைட் வைட்ஸ்கிரீன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1366 x 768 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு ஏஎம்டி ஏபியு டூயல் கோர் ஏ9 செயலி மற்றும் 3ஜிகாஹெர்ட் அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.

குறிப்பாக 4ஜிபி டிடிஆர்4 ரேம் வசதி மற்றும் 1டிபி உள்ளடக்க மெமரி ஆதரவு இவற்றுள் அடக்கம். அதன்பின்பு எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி 3.1 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், ஆடியோஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த ஹெச்பி லேப்டாப் மாடல். ஹெச்பி 15q-by002AX லேப்டாப் மாடலின் விலை ரூ.23,490-ஆக உள்ளது.

டெல் இன்ஸ்பிரான் 15 3565: டெல் இன்ஸ்பிரான் 15 3565 என்ற லேப்டாப் சாதனம் 15.6-இன்ச் எச்டி எல்இடி பேக்லைட் ட்ரூலைஃப் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 1டிபி உள்ளடக்க மெமரி இதனுள் அடக்கம். குறிப்பாக AMD Radeon R5 GPU செயலி மற்றும் மேக்ஸ்ஆடியோ ப்ரோ வசதி போன்ற அம்சங்கள் இதனுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 1366 x 768 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி 3.1 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட்,ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

டெல் இன்ஸ்பிரான் 15 3565 சாதனத்தின் விலை ரூ.28,990-/ பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கிறது.

ஏசர் ஆஸ்பியர் 3 ஏ315-33: ஏசர் ஆஸ்பியர் 3 ஏ315-33 சாதனம் பொதுவாக 15.6-இன்ச் எச்டி எல்இடி பேக்லைட் டிஎப்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1366 x 768 பிக்சல் திர்மானம் மற்றும் 2.1கிலோ எடையுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

குறிப்பாக குவாட்-கோர் சிபியு மற்றும் 4ஜிபி ரேம், 500ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல். விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளம், யுஎஸ்பி 2.0 போர்ட்ஸ், யுஎஸ்பி 3.1 போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். ஏசர் ஆஸ்பியர் 3 ஏ315-33 சாதனத்தின் விலை ரூ.18,990-ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *