சென்னை: விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி வெற்றியை தொடர்ந்து நடிகை ரித்விகா வெற்றி பெற்று ரூ. 50 லட்சம் பரிசை வென்றுள்ளார். இந்த போட்டியில் 17 பேர் பங்கு கொண்டனர். இடையில் வைல்ட் கார்ட் எண்டிரியாக நடிகை விஜயலட்சுமி நுழைந்தார். பங்கேற்பாளர்கள் வாரம் ஒருவராக ரசிகர்களின் வாக்கெடுப்புப் படி வெளியேறினார்கள்.

இறுதிச் சுற்றில் ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் மட்டுமே வீட்டில் தங்கி இருந்தனர். இந்த சீசனில் இறுதிச் சுற்றில் அனைத்தும் பெண்களே பங்கு கொண்டது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்த நிகழ்வின் கிராண்ட் ஃபினாலே நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஏற்கனவே இந்த போட்டியில் இருந்து வெளியேறியவர்களும் முந்தைய சீசனின் நட்சத்திரங்களான ஓவியா, ஆரவ் ஆகியோரும் கலந்துக் கொண்டனர். நடிகர் நடிகைகளின் ஆட்டம் கொண்டாட்டத்துடன் விழா நடந்தது.

இந்த பிக் பாஸ் 2 போட்டியில் நடிகை ரித்விகா வெற்றி பெற்றுள்ளார். மக்கலின் வாக்குகள் அடிபடையில் முதல் இடத்ஹை பிடித்த அவருக்கு பிக் பாஸ் கோப்பை மற்றும் ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தை ஐஸ்வர்யா மர்றும் மூன்றாம் இடத்தை விஜயலட்சுமி பிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *