பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். தற்சமயம் ரூ.349 திட்டத்தில் 3.2ஜிபி டேட்டாவை கூடுதல் நாட்களுக்கு வழங்கியுள்ளது அந்நிறுவனம்

அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.349 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3.2ஜிபி டேட்டா 64நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலம் இலவச வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில்

வழங்கப்படுகிறது. மேலும் இதற்குமுன்பு ரூ.349 திட்டத்தில் இதே சலுகையை 54 நாட்களுக்கு மட்டும் பிஎஸ்என்எல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்த பல சிறப்பு திட்டங்களைப்

பார்ப்போம். பிஎஸ்என்எல் ரூ.298 திட்டம்: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.298 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா 54 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு இலவச வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்: பிஎஸ்என்எல் ரூ.98 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 24 நாட்களுக்கு வழங்கப்படுகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.399 திட்டம்: பிஎஸ்என்எல் ரூ.399 திட்டத்தில் 3.21ஜிபி கூடுதல் டேட்டா நன்மையுடன், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை டெல்லி மற்றும் மும்பை போன்ற வட்டாரங்களுக்கும் பொருந்தும்.

ரூ.798 போஸ்ட்பெயிட் திட்டம்: பிஎஸ்என்எல் ரூ.798 விலையில் போஸ்ட்பெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை என்னவென்றால், தினசரி 100எஸ்எம்எஸ், 120ஜிபி 2ஜி/3ஜி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.155 ரீசார்ஜ்: பிஎஸ்என்எல் ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வீதம் 17 நாட்களுக்கு 34ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *