Qandeel Baloch2316பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை குவான்டீல் பலூச் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்ரிடியை பைத்தியம் என கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 20 ஓவர் லீக் போட்டியில் கடந்த ஞாயிறு அன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

இந்த போட்டியை டிவியில் பார்த்து, ஆத்திரமடைந்த அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் டிவியை அடித்து நொறுக்கினர். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவும், கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியதோடு, பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் வீரர்களின் கொடும்பாவிகளையும் எரித்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி கேப்டன் அப்ரிடியை பைத்தியம் என அந்நாட்டு டிவி நடிகை குவான்டீல் பலூச் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்ரிடி போன்ற பைத்தியத்தை கேப்டனாக வைத்துக் கொண்டு நாம் யாரையும் ஜெயிக்க முடியாது. விரைவில் உலகக் கோப்பை போட்டியும் வரப்போகிறது. இப்படிப்பட்ட நிலையில் நமது அணியின் நிலையை பாருங்கள். வெட்கமாகவும், அவமானமாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார். டிவி நடிகை குவான்டீல் பலூச்சின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English Summary: Can not win in any competition with Afridi. TV actress controversial comment.