whatsapp-heroஉலகின் முன்னணி சமூக வலைத்தளங்களாக விளங்கி வரும் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு இணையாக பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘வாட்ஸ் அப்’ இயங்கி வருகிறது. அறிமுகமான ஏழே ஆண்டுகளில் வாட்ஸ் அப்பின் முன்னேற்றம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இன்றைய நிலையில் வாட்ஸ் அப்பில் இல்லாதவர்களை ஏளனமாக பார்க்கும் நிலை தான் பெரும்பாலும் நிலவுகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமான ‘வாட்ஸ்ஆப்’ முதலில் பிளாக்பெர்ரி, நோக்கியா கருவிகளில் மட்டுமே 70 சதவீதம் இருந்தன. ஆனால், தற்போது கூகுளின் ஆன்ட்ராய்டு, ஆப்பிளின் ஐ.ஓ.எஸ், மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஆகிய இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களே 99.5 சதவீதம் அளவுக்கு புழக்கத்தில் உள்ளன. ஆனால், இவையெல்லாம் அப்போது 25 சதவீதம் கூட இல்லை.

இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பிளாக்பெர்ரி, பிளாக்பெர்ரி 10, நோக்கியா எஸ்40, நோக்கியா எஸ்60, விண்டோஸ் 7.1, ஆன்ட்ராய்டு 2.1 மற்றும் ஆன்ட்ராய்டு 2.2 ஆகிய இயங்குதளங்களில் ‘வாட்ஸ்ஆப்’ தனது சேவையை நிறுத்த உள்ளதாக அதனுடைய வலைதளத்தில் தெரிவித்துள்ளது. எனவே, பழைய இயங்குதளங்களில் உள்ள ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பவர்கள் உடனடியாக அப்கிரேடு செய்து கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் வாட்ஸ் அப் அவர்களுடைய மொபைலில் செயல்படாத நிலை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Nokia, BlackBerry Whatsapp service stop.