மணிரத்னம் இயக்கியுள்ள படம் ‘செக்கச்சிவந்த வானம்’. அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, டயானா இரப்பா, அருண் விஜய், விஜய் சேதுபதி, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என நிறைய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தயாரித்துள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள், கடந்த 5-ம் தேதி வெளியிடப்பட்டன.

வருகிற 28-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், 27-ம் தேதியே ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது லைகா புரொடக்‌ஷன்ஸ். இந்தப் படம் ‘நவாப்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தெலுங்கிலும் அதே தேதியில் ரிலீஸாகிறது.

நிறைய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளதால், இப்போதே படத்துக்குப் பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *