சென்னையில் உள்ள ரயில்வே தண்டவாளங்கள் உள்பட ஒருசில பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடைபெறும்போது ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி இடையிலான பராமரிப்பு பணிகள் தற்போது நடைபெற உள்ளதால் ஜனவரி 24, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த செய்திக்குறிப்பின் முழு விவரம் பின்வருமாறு:

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே காலை 11, 11.15, 11.20, 11.30, 11.40, 11.45 மதியம் 12, 12.05, 12.20, 12.25, 12.40, 12.45, 1, 1.05, 1.20, 1.25, 1.40, 1.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், வேளச்சேரி – சென்னை கடற்கரை இடையே காலை 11.10, 11.20, 11.30, 11.35, 11.50, 11.55, மதியம் 12.10, 12.15, 12.30, 12.35, 12.50, 12.55, 1.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

English Summary: Chennai Beach to Velachery EMU train timings rescheduled due to maintenance work in Tracks.