சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே 4-வது புதிய பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, சிந்தாதிரிப்பேட்டை – கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இது, 7 மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
இதன் காரணமாக, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து 140 பேருந்து சேவைகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூர்-கடற்கரை இடையேயான 4-வது பாதை சுமார் ரூ.280 கோடி மதிப்பில் 4 கி.மீ.தொலைவுக்கு அமைகிறது. இப்பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கப்படவுள்ளது.
சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது. அடுத்த 7 மாதங்களுக்கு சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே மட்டும் மின்சார ரயில் இயக்கப்படும்.
வேளச்சேரி-சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையில் நிறுத்தப்பட்டன. இதுபோல, கடற்கரைக்கு பதிலாக, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. கடற்கரை – வேளச்சேரி இடையே 122 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் 80 சேவை மட்டுமே இயக்கப்பட்டன.