jothika.விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் மாரத்தான் ஓட்டப் போட்டிகள் அடிக்கடி நடைபெற்று வரும் சென்னையில் நேற்று குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. ‘சென்னை கிடாத்தான்’ (Chennai Kidathon) என்ற பெயரில் நேற்று நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி மூன்று பிரிவுகளாக 500மீ, 2 கிமீ, மற்றும் 4கிமீ தூர ஓட்டப்போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 3 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் கலந்து கொண்டனர்.

3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் 500மீ போட்டியிலும், 6 முதல் 12 வயதிலான குழந்தைகள் 2கிமீ தூர போட்டியிலும் அதற்கு மேல் வயதுள்ள குழந்தைகள் 4கிமீ தூர போட்டியிலும் கலந்து கொண்டனர். இதில் 4கிமீ தூர மாரத்தான் போட்டியை நடிகை ஜோதிகா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதேபோல் கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், உத்தம வில்லன் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த பூஜாகுமார் 500மீ போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் ஜோதிகாவின் மகளும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

English Summary:Chennai marathon contest Flag Waving Jyotika-pujakumar