dhansikaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களை ஒப்பந்தம் செய்வதில் இயக்குனர் தீவிரமாக உள்ளார். ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது ரஜினியின் மகளாக நடிக்கும் நடிகையை தேர்வு செய்வதில் ரஞ்சித் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனையில் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தன்ஷிகாவை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறபடுகிறது. இவர் பேராண்மை, பரதேசி, அரவான் உள்பட பல படங்களில் நடித்தவர்.

மேலும் ரஜினியின் நண்பராக நாசரும், நண்பரின் மகனாக மெட்ராஸ்’ படத்தில் நடித்த கலையரசனும், மற்றொரு முக்கிய வேடத்தில் அட்டக்கத்தி தினேஷும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் 90% படப்பிடிப்புகள் மலேசியாவிலும், ஒருசிறு பகுதி மட்டும் சென்னையிலும் படமாக்க இருக்கின்றது.

இந்த படத்திற்கு ‘காளி’ என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இதுகுறித்து படக்குழுவினர் கூறியபோது, “காளி’ என்ற தலைப்பு வைக்கலாம் என பேச்சுவார்த்தை எழுந்தது உண்மை தான். ஆனால் ரஜினி சார், “இந்தத் தலைப்பை வைத்தே ஆக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், திரையுலகில் கொஞ்சம் விசாரித்துவிட்டு வையுங்கள்” என்று சொல்லிவிட்டார். ரஜினி சார் ஏன் இப்படி சொன்னார் என்று ரஞ்சித் விசாரித்த போது சில விஷயங்கள புரிய வந்தது.

அதாவது ‘காளி’ படப்பிடிப்பின்போது தீவிபத்து ஏற்பட்டு 5 பேர் பலியானார்கள். அதேபோல் ‘நரசிம்மா’ என்று பெயர் வைத்து படம் தயாரிக்கப்பட்டபோது, அந்த படம் வெளியாகும் முன்பே இயக்குநர் மரணமடைந்துவிட்டார். எனவே ‘காளி’, ‘நரசிம்மா’ போன்ற பெயர்களை இயக்குநர்கள் தவிர்த்து வருவது தெரிந்தது. எனவே இந்த படத்திற்கு வேறு பொருத்தமான டைட்டில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினர்.

 

English Summary:Dhansika acting a daughter of super star .