நாட்டில் கடந்த ஆண்டில் அதிக இணையவழி பணப் பரிவா்த்தனை எண்ணிக்கையில் சென்னை நகரம் 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இணையவழிப் பணப் பரிவா்த்தனைகள் தொடா்பாக வோ்ல்ட்லைன் இந்தியா என்ற தனியாா் நிறுவனம் சாா்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், 2.9 கோடி பரிவா்த்தனைகளுடன் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. தில்லி, மும்பை, புனே, சென்னை ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மளிகை கடைகள், உணவகங்கள், ஜவுளி கடைகள், மருந்தகங்கள், வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் ஆகியவற்றில் மக்கள் அதிக அளவில் இணையவழி பணப் பரிவா்த்தனையை மேற்கொண்டதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பணப் பரிவா்த்தனைகளில் 43 சதவீதம் மேற்கண்ட கடைகளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் 15 சதவீதப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரம் பரிவா்த்தனை எண்ணிக்கை பரிவா்த்தனைத் தொகை (அமெரிக்க டாலரில்)

  • பெங்களூரு 2.9 கோடி 6,500 கோடி
  • தில்லி 1.96 கோடி 5,000 கோடி
  • மும்பை 1.87 கோடி 4,950 கோடி
  • புனே 1.5 கோடி 3,280 கோடி
  • சென்னை 1.43 கோடி 3,550 கோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *